திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் போக்கு காட்டிய பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் புகுந்த 5 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுப்பதற்கு வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு பகுதியில் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த பூங்காவிற்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று புகுந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர்கள் தற்காப்பு உபகரணங்கள் உதவியுடன் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.