செய்முறை தேர்வுகள் நிறைவு; மேசை, நாற்காலிகளை உடைத்து வீடியோ வெளியிட்ட மாணவிகள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அமானிமல்லாபுரம் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையில் உள்ள மேசை, நாற்காலி, மின்விசிறி ஆகியவற்றை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அமானிமல்லாபுரம் மேல்நிலைப் பள்ளியில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை விளக்கம் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. தேர்வு முடிந்த கடைசி நாளான நேற்று மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையில் உள்ள மேசை, நாற்காலி, மின்விசிறி ஆகிய பொருட்களை அடித்து உடைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் தந்தவுடன் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Video