Watch : ஓடும் லாரியை வழிமறித்து கொள்ளை! டிரைவர்ரை கட்டிப்போட்டு ரூ.11.50 லட்சம் திருட்டு! -கும்பல் கைவரிசை

தர்மபுரி அருகே லாரியை வழிமறித்த கொள்ளை கும்பல் ஒன்று, ஓட்டுநரை கட்டிப்போது ரூ.11.50 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Video

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மற்றும் மற்றும் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா காலையம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இருவரும் ஓசூரில் இருந்து தென்காசி ஆலங்குளம் சந்தைக்கு தக்காளி லோடு ஏற்றி இறக்குவது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை கடந்த ஒரு வாரமாக தக்காளி லோடு இறக்கிய பணம் ரூ.11.50 லட்சத்தை பெற்றுக் கொண்டு தாடிக்கொம்பு அருகே வந்தபோது, டாட்டா சுமோ வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் லாரியின் முன்பாக டாட்டா சுமோ வாகனத்தை மறித்து நிறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணன் லாரியை நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிய நான்கு நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே சென்ற நான்கு நபர்கள் ஓட்டுநர்களான பாலகிருஷ்ணன் மற்றும் சதீஷ்குமாரை கத்தி முனையில் மிரட்டி கைகளை பின்பக்கமாக கட்டி லாரியின் ஓரத்தில் அமர வைத்தனர்.

ஒருவர் அவர்களுக்கு காவலுக்கு நிற்க, மற்றொருவர் லாரியை ஓட்ட தொடங்கியுள்ளார். மற்ற இருவர் லாரிக்குள் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டனர். லாரி வேடசந்தூர் அடுத்த விருதலைப்பட்டி அருகே வந்த போது லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர் என லாரியிலிருந்து தப்பித்த இருவரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தனர்.

Related Video