தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவரது தொண்டர்கள் 300 பேர் மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்தனர்.

Share this Video

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தனியார் விடுதி வளாகத்தில், தேமுதிக தலைவரும், முன்னாள் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மார்பளவு சிலை நிறுவப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்தபோது ஒகேனக்கலில் வைதேகி காத்திருந்தாள், கரிமேட்டு கருவாயன், சிறையில் பூத்த சின்ன மலர், செந்தூரப்பூவே, பெரிய மருது உட்பட ஒகேனக்கலில் 17 படங்களில் நடித்து உள்ளார். 

அதனை நினைவுபடுத்தும் விதமாக இன்று ஒகேனக்கலில் தேமுதிக மாநில அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையில், கேப்டன் விஜயகாந்த்க்கு மார்பளவு சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, தேமுதிக சார்பாக 300 பேர் மொட்டை அடித்து ஈமச்சடங்கில் ஈடுபட்டனர். மேலும் 3000 பேருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Video