இரட்டை தலையுடன் பிறந்த கன்று குட்டி; ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இரட்டைத் தலையுடன் பிறந்த கன்று குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Share this Video

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் ரவீந்தர் என்கிற விவசாயி அவரது இல்லத்தில் இரண்டு கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்க்கும் மாடு ஒன்று தாய்மை அடைந்து இன்று அதிகாலை ஆண் கன்று ஒன்றை ஈன்றது. 

இரண்டு தலைகளுடன் ஒட்டிப் பிறந்த இந்த கன்று குட்டிக்கு நான்கு கண்களும் இரண்டு வாய் மற்றும் இரண்டு மூக்கு என அதிசயமாக பிறந்துள்ளது. இந்த தகவல் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தெரியவர காட்டு தீ போல் பரவியது. இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்து செல்கின்றனர். 

இந்த மாட்டின் உரிமையாளர் பசு மாட்டையும் ஈன்ற அதன் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

Related Video