Viral : யானையை விரட்ட வான வெடி! தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிர்கள் நாசம்!

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி மலை கிராமத்தில் ஒற்றை யானையை விரட்டுவதற்காக விடப்பட்ட வான வெடி, கரும்பு தோட்டத்தில் விழுந்ததால் ஒன்றரை ஏக்கர் எரிந்து நாசமானது.
 

First Published Mar 16, 2023, 11:18 AM IST | Last Updated Mar 16, 2023, 11:18 AM IST

தர்மபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அடுத்த பிக்கிலி மலை கிராமத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்து வருகிறது. இந்நிலையில் பிக்கிலி கிராமத்தை சேர்ந்த ரைஸ் மில் பகுதியில் உள்ள மாதையன் சிவராஜ் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு விவசாயம் செய்துள்ளனர்.

இந்நிலையல் வனப்பகுதிதை விட்டு கிராமத்திற்குள் சுற்றித்திரிந்த காட்டு யானை இந்த கரும்பு தோட்டத்தில் நுழைந்ததை அடுத்து வனத்துறையினர் அஜாக்கிரதையாக வான வெடி வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வானவெடி கரும்பு தோட்டத்திற்குள் விழுந்து சுமார் ஒன்றை ஏக்கர் அளவில் கரும்பு தோட்டம் தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்த வந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் கரும்பு காடு பற்றி எரிந்தது குறித்து வருவாய்த் துறையினர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் வந்து நேரில் சென்று பார்க்கவில்லை என்றும், தெரிவித்து தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாப்பாரப்பட்டி - பிக்கிலி கிராமத்திற்கு செல்லும் ரைஸ் மில் சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.