திடீரென சாலையை கடந்த வெள்ளை நிற பாம்பு; ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்

தர்மபுரி மாவட்டத்தில் திடீரென சாலையைக் கடந்த அரிய வகை வெள்ளை நிற பாம்பை வாகன ஓட்டுகள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

First Published Jul 10, 2023, 6:06 PM IST | Last Updated Jul 10, 2023, 6:06 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுததுள்ள கரியம்பட்டியில் இருந்து  முதுகம்பட்டி கிராமம் வரை தற்போது தார் சாலை சீரமை்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் அருகேயுள்ள நாய்க்கனேரி என்ற கிராமத்தில், குட்டை ஒன்றில் வெள்ளை நிர சாரைப்பாம்பு மிதந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கரியம்பட்டி, முதுகம்பட்டி செல்லக்கூடிய சாலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த வெள்ளை சாரைப் பாம்பானது சாலையை கடந்து சென்றது. 

அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்கள் சாலையை கடந்து சென்ற அறிய வெள்ளை சாரை பாம்பை வியப்புடன் பார்த்து சென்றனர். 

Video Top Stories