தர்மபுரி அருகே கதிர் அடிக்கும் மெஷினில் சிக்கி பள்ளி மாணவி பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம்!
தர்மபுரி அருகே கதிர் அடிக்கும் மெஷினில், பள்ளி மாணவி சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது 13 வயுது மகள், கேத்திரெட்டிப்பட்டி அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்
இவரது மாமா சக்திவேல் தோட்டத்தில் ராகி கதிர் அடிக்கும் மெஷின் அருகே விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அப்போது எதிர்பாராதவிதமாக கதிர் அடிக்கும் மெஷினின் ஒரு பாகம் பள்ளி மாணவியின் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் போலீசார், இறந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.
பள்ளி மாணவி இந்த சம்பவத்தால், மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.