கடலூரில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த வெள்ளை நிற நாகம்; லாகவமாக மீட்ட பாம்பு பிடி வீரர்

கடலூரில் பழைய இரும்பு கடையில் சுற்றித்திரிந்த அரியவகை வெள்ளை நாகப் பாம்பை லாகவமாக பிடித்த பாம்பு பிடி வீரர் அதனை வனப்பகுதியில் விடுவித்தார்.

First Published Feb 20, 2024, 1:50 PM IST | Last Updated Feb 20, 2024, 1:50 PM IST

கடலூர் அருகே உள்ள பச்சாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் இரும்பு கடையில் பணியாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் பாம்பு இருப்பதை கண்ட அவர்கள் உடனடியாக பாம்பு பிடி வீரர் கடலூர் செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த செல்லா அப்பகுதியில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் கொண்ட வெள்ளை நாகப் பாம்பை லாபகமாக மீட்டு காப்பு காட்டில் விடுவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த வெள்ளை நாகம் என்பது ஜீன் குறைபாட்டால் அரிய வகை பாம்பு எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பாம்புகள் எளிதில் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

Video Top Stories