குடியரசு தினவிழா.. சிதம்பரம் நடராஜர் கோயிலின் 152 அடி உயர கோபுரத்தில் பறக்கும் தேசியக்கொடி..!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 74வது குடியரசு தின விழா முன்னிட்டு கிழக்கு கோபுரத்தில்  தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

First Published Jan 26, 2023, 1:03 PM IST | Last Updated Jan 26, 2023, 1:03 PM IST

நாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை, ஆதாரனை செய்யப்பட்டது. பின்னர், 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தீட்சிதர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

Video Top Stories