கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்களிடையே தள்ளு முள்ளு; பேருந்தை இயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்.

First Published Jan 9, 2024, 9:57 AM IST | Last Updated Jan 9, 2024, 9:57 AM IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருக்கும் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்தன. 

அதன் அடிப்படையில் இன்று திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது கடலூர் அரசு போக்குவரத்து கழக  பணிமனையில் தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் ஒன்று சேர்ந்து பேருந்தை இயக்க  முயன்றவர்களுடன் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Video Top Stories