இரண்டாவதும் பெண் குழந்தையா? கர்ப்பிணியை தாக்கி கொடுமை படுத்திய கொடூரன் - பெண் கதறல்

மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற சந்தேகத்தில் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி கர்ப்பிணி கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் எதிரே தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Feb 23, 2024, 5:44 PM IST | Last Updated Feb 23, 2024, 5:47 PM IST

கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு மாலை நேரத்தில் ஒரு பெண் தனது பெண் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது அவர் திடீரென எஸ்பி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த எஸ்பி ராஜாராம் நேரடியாக வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில் அந்த பெண் வடலூர் அருகே உள்ள வானதி ராயபுரத்தைச் சேர்ந்த பூவராக சாமி மனைவி காயத்ரி (வயது 23) என்பதும், அவர் தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் கூறுகையில், தனது கணவர் தன்னையும், தனது பெண் குழந்தையையும், அடித்துக் கொடுமைப்படுத்துகிறார். 

இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்து விடுமோ என்ற எண்ணத்தில் தினந்தோறும் தன்னை துன்புறுத்துவதாகவும் கூறினார். இதைக் கேட்ட எஸ் பி தற்போது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள், உங்களது கணவரை அழைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் எஸ்பி அலுவலக வளாகத்தில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories