கனமழை எதிரொலி.. கடலூரில் கடும் மழைக்கு இடையே திருமணம் செய்த ஜோடி - வைரல் வீடியோ !

கடுமையான மழைக்கு நடுவே இளம் ஜோடி ஒன்று கோவிலில் திருமணம் செய்த சம்பவம் அனைவரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Video

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது.

தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதற்கான மீட்பு பணியில் அரசு ஊழியர்கள் குதித்துள்ளனர். இந்த நிலையில் கடலூரில் கடும் மழைக்கு நடுவில் இளம் ஜோடி ஒன்று கோவிலில் திருமணம் செய்த சம்பவம் அனைவரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வருகிறது.

இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்

இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !

Related Video