தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, ஆடை வழங்கி கௌரவித்த பாஜகவினர்

கடலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஆணையத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்.

Share this Video

தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் ம.வெங்கடேசன் பிறந்தநாளையொட்டி பாரதிய ஜனதா கட்சி எஸ்.சி/எஸ்.டி அணி சார்பில் கடலூர் மாநகராட்சியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் குண்டு சாலை ரோட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி எஸ்ஏஎஸ்டி அணி தலைவர் காரைக்கண்ணன் தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புடவை மற்றும் இனிப்புகளை வழங்கி கடலூர் மாநகராட்சியின் தூய்மைக்கு உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Video