Watch : வாகன FC-க்கு ரூ.5500 லஞ்சம்! வட்டார போக்குவரத்து அலவலர் கைது!

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பெயர் மாற்றம் மற்றும் FCக்காக லஞ்சம் கேட்ட, வட்டாரப் போக்குவ ரத்து அலுவலர் மற்றும் லஞ்சம் வாங்க உதவிய புரோக்கர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

First Published Jun 1, 2023, 1:26 PM IST | Last Updated Jun 1, 2023, 1:26 PM IST

கடலூர் மாவட்டம் கூத்தபாக்கத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தனது நண்பர் செல்வராஜ் வாங்கிய கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டி, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வந்து ஆர்.டி.ஓ.விடம் கேட்டபோது அதற்கு ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதால் வெங்கடாசலபதி லஞ்ச ஒழிப்புத் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் லஞ்சம் வாங்க உதவிய புரோக்கர் சிவா ஆகிய இருவரையும் தக்க சமயத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கணக்கில் வராத 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கைப்பற்றினர்.