சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 56 பேர் அதிரடி பணி நீக்கம்
சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர்கள் 56 பேரை பணி நீக்கம் செய்து அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் போதிய கல்வி தகுதி இல்லாமல் இணை பேராசிரியர்கள் பலர் பணியாற்றி வருவதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் உயர்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டது. அதன்படி போதிய கல்வித் தகுதி இல்லாமல் இணை பேராசிரியர்களாக பணியாற்றிய 56 பேரை பணி நீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தற்பொழுது 56 உதவி பேராசிரியர்களுக்கு டிஸ்மிஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடரும் என்று கூறப்படுகிறது.