
சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கினாலும் 1 மணி நேரத்தில் அகற்றப்படுகிறது - அமைச்சர் நேரு
சென்னையின் எந்த பகுதியில் மழை நீர் தேங்கினாலும் 1 மணி நேரத்தில் அவை அகற்றப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், ஆனாலும் மழை நீர் தேங்கும் பட்சத்தில் அவற்றை 1 மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

மேலும் அவர் கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் மழை பெய்தாலும் மழை நீர் தேங்காதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.