ரயில் முன் காதலனால் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை உடலுக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி!!

ரயில் முன் காதலனால் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா மற்றும் அவரது தந்தை உடலுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் மலரஞ்சலி செலுத்தினார். 

First Published Oct 14, 2022, 3:59 PM IST | Last Updated Oct 14, 2022, 4:31 PM IST

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் காதலனால் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா உடல் மற்றும் அவரது தந்தை உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது தந்தை மாணிக்கம், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர்களது இரண்டு உடல்களும் இன்று பிற்பகல் ஆலந்தூரில் காவலர் குடியிருப்பில் இருக்கும் அவர்களது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து தமிழக அரசு சார்பாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் வந்திருந்து இரண்டு ஊடல்களுக்கும் மாலை அணிவுத்து அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Video Top Stories