உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் முகாம் 24 முதல் தொடக்கம் - மேயர் பிரியா தகவல்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் காணும் முகாம் சென்னையில் ஜூலை 24 முதல் தொடங்கும் என்று மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம் குறித்து சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 200 இடங்களில் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் உள்ள ஆயிரத்து 415 ரேஷன் கடைகளில் தன்னார்வளர்களை நியமித்து விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னையில் மகளிர் உரிமைத் தொகை முகாம் வருகின்ற 24ம் தேதி முதல் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.