மதுபோதையில் விமான நிலையத்தில் அலப்பறை செய்த வேல்முருகனை சுத்துபோட்ட அதிகாரிகள்

சென்னை விமான நிலையத்தில் மதுபோதையில் பாடகர் வேல்முருகன் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன் நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை என தெரிகிறது. 

இதனால் நாட்டுப்புறப் பாடகர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் வேல்முருகனின் விமான பயணத்தை ரத்து செய்துள்ளனர். அதன் பின் நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவரை வேறு ஒரு விமானத்தில் திருச்சி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video