
Watch : ஜெயலலிதா குறித்து சசிகலா கூறிய அதிர்ச்சி தகவல்!
2016 டிச.19ம் தேதி ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து விவாதித்துக்கொண்டிருந்தோம், ஆனால் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என சசிகலா புதிய தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த, சசிகலா, ஜெயலலிதா மருத்துவமனையில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்தார் என தெரிவித்தார். மேலும், அங்குள்ள மருத்துவ பணிப் பெண்களுக்கு, மருத்துவர்களுக்கு பரிசு அளிக்கவும் முடிவு செய்திருந்தார் எனவும் தெரிவித்தார். 2016 டிச.19ம் தேதி ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து விவாதித்துக்கொண்டிருந்தோம், ஆனால் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என சசிகலா அதிர்ச்சி தகவல் தெரிவித்தார். ஆறுமுக சாமி ஆணையத்திற்கு எழுத்துவாயிலாக அனைத்து தகலையும் உண்மையாக தெரிவித்தாகவும் சசிகலா கூறினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
