சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடியுடன் மழை பெய்து மக்களை குளிர்வித்தது - லைவ் வீடியோ!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடியுடன் மழை பெய்தது.

First Published Mar 17, 2023, 5:19 PM IST | Last Updated Mar 17, 2023, 5:19 PM IST

எழும்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, சாலிகிராமம், கோடம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மதியம் வரை மழை பெய்து. பல வாரங்களாக மக்கள் அனுபவித்து வந்த வெப்பத்தை தணித்தது. மேலும் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. 

வார இறுதியில் (மார்ச் 17 மற்றும் 19 க்கு இடையில்) இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Video Top Stories