ராட்டினத்தின் ஒரு பகுதி விழுந்து விபத்து..! குயின்ஸ்லாண்டை மூட உத்தரவு வீடியோ..

ராட்டினத்தின் ஒரு பகுதி விழுந்து விபத்து..! குயின்ஸ்லாண்டை மூட உத்தரவு வீடியோ..

First Published Jun 21, 2019, 1:25 PM IST | Last Updated Jun 21, 2019, 1:25 PM IST

நேற்று முன்தினம் இங்குள்ள ராட்டினத்தில் சுற்றுலா பயணிகள் ஏறி உள்ளனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்த ராட்டினத்தின் இரும்பு கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது.

உயரமான பகுதியில் சென்றபோது இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். கீழ் பகுதியில் இருந்தபோது, ராட்டினத்தின் ஒரு பகுதி இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்ததால் லேசான காயங்களுடன் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உபகரணங்களுக்கு தரச்சான்று பெறும் வரை இயக்ககூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Video Top Stories