கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி - பிரேமலதா அறிவிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

First Published Dec 30, 2023, 1:42 PM IST | Last Updated Dec 30, 2023, 1:42 PM IST

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையோடு கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மனைவியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த்க்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.