வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற எம்எல்ஏவை விரட்டியடித்த வேளச்சேரி மக்கள்

சென்னை வேளச்சேரி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானாவை அப்பகுதி மக்கள் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

புயல், கனமழை காரணமாக சென்னையில் மிகவும் பாதித்த பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி உள்ளது. இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் அதன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அசான் மௌலானா ஆய்வு மேற்கொள்ளச் சென்றார். பல பகுதிகளில் மழை நீர் வடியவில்லை, மின்சாரம் இல்லை, உணவுப்பொருள் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் மிகுந்த ஆவேசத்தில் இருந்தனர்.

இதனிடையே ஆய்வுக்காகச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் அசான் மௌலானாவை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அவரை தொகுதிக்குள் வரவிடாமல் விரட்டியடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Video