கர்ப்பகாலத்தில் மனநலன், உடல் நலன் மிகவும் முக்கியமானது - கிருத்திகா உதயநிதி பேச்சு

கர்ப்பிணிகள் உடல் நலம் மற்றும் மனநலனை பாதுகாக்க வேண்டும் என  சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிருத்திகா உதயநிதி வலியுறுத்தினார்.

Share this Video

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருக்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் பேசிய கிருத்திகா, நானும் இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளேன். 

கர்பாலாத்தில் மனநலன் மற்றும் உடல் நலன் பேணுவது முக்கியம். குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துகள் என்றார். இதனைத் தொடர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை மற்றும் வளையல் அணிவித்து, பழங்கள், சத்துமாவு, புடவை அடங்கிய சீர்வரிசை தட்டையும் வழங்கினார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Related Video