வலிப்பு வந்து சாலையில் உயிருக்கு போராடிய இளைஞர், ஓடி வந்து உதவிய காவலர்கள்; பொதுமக்கள் நெகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் மயங்கிவிழுந்த நபருக்கு காவல் துறையினர் உதவி செய்தனர்.

First Published Jul 27, 2023, 3:14 PM IST | Last Updated Jul 27, 2023, 3:14 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (வயது 32). இவர் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதன் தொடர்ச்சியாக சதீஷிக்கு வலிப்பு ஏற்பட்டு இரண்டு கை, கால்களை  இழுத்துக் கொண்டிருந்ததை பார்த்த காவலர்கள் சதீஷ்க்கு தங்கள் வைத்திருந்த இருசக்கர வாகன இரும்பு சாவியை கொடுத்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு சதீஷ் சகஜ நிலமைக்கு திரும்பி கண் விழித்து பார்த்தார்.

இதனை தொடர்ந்து காவலர்கள் சதீஷை எழுந்து நிற்க வைத்தனர். அருகில் இருந்த போக்குவரத்து காவலர்களுக்கு இரண்டு கரம் கூப்பி நன்றி தெரிவித்தார். சதீஷ் தின கூலி வேலை செய்து வருவதாகவும், உறவினர் வீட்டிற்க்கு செல்ல தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வந்த போது வலிப்பு ஏற்பட்ட நிலையில், காவலர்கள் சதீஷ்க்கு முதலுதவி செய்து காப்பாற்றியது பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Video Top Stories