கோயம்பேடு தேமுதிக அலுவலகம் எதிரே தொண்டர்கள் சாலை மறியல்; போலீஸ் தடியடி

கோயம்பேட்டில் தே.மு.தி.க அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

Share this Video

தேமுதிக தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேடு சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படாததால் தேமுதிக தொண்டர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் தே.மு.தி.க தொண்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். தற்போது அவர்களுக்கு கோரிக்கையை ஏற்று கோயம்பேடு மேம்பாலம் செல்லும் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Related Video