சென்னையில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்த அரைகுறை ஓட்டுநர்; ஒருவர் பலி

சென்னை கீழ்பாக்கத்தில் தாருமாறாக ஓடிய கார் மோதி சாலையில் நடந்து சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First Published Sep 28, 2023, 3:29 PM IST | Last Updated Sep 28, 2023, 3:29 PM IST

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சாலை எப்பொழுதும்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று திடீரென வேகமாக சீறிப் பாய்ந்து எதிர் திசையில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த நபர் மீதும் கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

முதல்கட்ட விசாரணையில் காரில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Video Top Stories