Watch : பணப்பையுடன் வந்த NIA அதிகாரிகள்! - PFI செயலாளர் குற்றச்சாட்டு!

செய்தியாளர்களை சந்தித்த PFI-யின் தமிழ் மாநில செயலாளர் நாகூர் மீரான், தேசிய புலனாய்வு முகமை அதிகார்கள், வீட்டினுள் வரும் போதே பணப்பையுடன் அதிகாரிகள் வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

First Published Sep 22, 2022, 5:38 PM IST | Last Updated Sep 22, 2022, 5:38 PM IST

நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்புக்கு எதிராக அதன் நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), அமாலக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

உத்தரப்பிரதேசம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்துவரும் இந்த ரெய்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையின், இந்த ரெய்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த PFI-யின் தமிழ் மாநில செயலாளர் நாகூர் மீரான், தேசிய புலனாய்வு முகமை அதிகார்கள், வீட்டினுள் வரும் போதே பணப்பையுடன் அதிகாரிகள் வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.