பிறந்த நாளில் தாளில் தாய், தந்தையரை வணங்கி கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி

பிறந்த நாளை முன்னிட்டு தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலினிடம் ஆசி பெற்றார்.

First Published Nov 27, 2023, 11:36 AM IST | Last Updated Nov 27, 2023, 11:36 AM IST

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Video Top Stories