சென்னையில் ஓடும் ரயிலில் நகையை பறித்துக் கொண்டு சிட்டாக பறந்த கொள்ளையன்

சென்னையில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துவிட்டு நபர் ஒருவர் தப்பித்து ஓடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jun 23, 2023, 5:06 PM IST | Last Updated Jun 23, 2023, 5:06 PM IST

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி(வயது 43). இவர் ராஜீவ்காந்தி மருந்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடித்து  சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் மின்சார ரயில் மூலம்  திருமுல்லைவாயலுக்கு சென்றுள்ளார்.

ரயில் பேசின்பிரிட்ஜ் நிலையத்தில் நின்று பின்னர் புறப்படும் போது திடீரென பின்பக்கத்தில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வளர்மதி அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து இறங்கி தப்பிசென்று உள்ளார். இது தொடர்பாக பேசின்பிரிட்ஜ் ரயில்வே போலீசார் விசாரணை தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் சென்டரல் ரயில் நிலையத்தில் வரும் சிசிடிவி காட்சியும்,  பேசின்பிரிட்ஜ் அருகே செயினை பறித்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Video Top Stories