ப்ரோ! என் கூட வா! நான் யாரு தெரியுமா? பட்டப்பகலில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் யூடியூபருக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள்

 A2D என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் நந்தா. இவர் மின்னணு சாதனங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவை குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Share this Video

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் பட்டப்பகலில் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்திய ரவுடிகள் யூடியூபரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். A2D என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் நந்தா. இவர் மின்னணு சாதனங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவை குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மின்னணு சாதனங்களுக்கு பெயர் பெற்ற சாலை ரிச்சி ஸ்ட்ரீட்டில் யூடியூப் சேனலுக்காக வீடியோ எடுத்தப்படி நடந்து வந்த நந்தா மற்றும் அவரது நண்பர்களை அங்கு மதுபோதையில் நின்றிருந்த சிலர் துரத்தி வந்து கேமராவை பிடிங்கி சென்றது மட்டுமல்லாமல் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து ஸ்ரீதர், பார்த்திபன் மற்றும் கிஷோர் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

Related Video