மகளிர் இலவசப் பேருந்தில் திடீர் ஓட்டை; ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் பயணி காயம்

சென்னையில் மாநகர அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி பேருந்தில் ஏற்பட்ட திடீர் ஓட்டையால் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.

Share this Video

சென்னையில் இன்று வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசு நகரப் பேருந்து வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் வழக்கம் போல் பயணிகள் இருந்த நிலையில் திடீரென பேருந்தின் பின் இருக்கையின் கீழே உள்ள பலகை திடீரென முறிந்து விழுந்தது. 

மேலும் ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். பெண் பயணி நூல் இழையில் உயிர் தப்பிய நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video