நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்? குஷ்பு பேட்டி
தவறான நோக்கத்தில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்காதபோது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னைப் பொருத்தவரை அனைவரும் சமம். தகாத வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லை, யாரையும் தவறாக பேசவில்லை
இத்தனை வருட சினிமா வாழ்வில் நான் யாரையும் கெட்ட வார்த்தையில் திட்டியது கிடையாது. நான் ஊரில் இல்லாத நேரத்தில் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பாக அளித்த தமிழ்நாடு காவல்துறைக்கு எனது மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமா? இல்லையா? என்பதை எனது கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன், இல்லையென்றால் நாடு முழுவதும் பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். நான் தவறான நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. அதனால் நான் வருத்தம் தெரிவிக்க வேண்டியது இல்லை என்று தெரிவித்துள்ளார்.