Video : நான் நலமுடன் உள்ளேன்! - ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரடி தகவல்!

மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவரே நேரடியாக தெரிவித்துள்ளார்.
 

First Published Mar 23, 2023, 11:37 AM IST | Last Updated Mar 23, 2023, 11:37 AM IST

கடந்த 15ம் தேதி திடீரென நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இருதய பாதிப்பு காரணமாக ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவார் என தெரிவிக்கப்படது.  அவர் குறித்த வதந்திகள் பரவி வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரை நேரடியாக தான் நலமுடன் இருப்பாதவும், விரைவில் வீடு திரும்பி சட்டமன்ற பணிகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Video Top Stories