ரயில்வே சுரங்கத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்து; போராடி மீட்ட அதிகாரிகள்

சென்னை செங்குன்றம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தை அதிகாரிகள் போராடி மீட்டனர்.

First Published Nov 22, 2023, 2:23 PM IST | Last Updated Nov 22, 2023, 2:23 PM IST

சென்னை செங்குன்றத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவொற்றியூரை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை மாநகர பேருந்து மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்கப்பாதையில்  மழைநீர் அதிக அளவு தேங்கியிருந்ததால் பேருந்து சிக்கி கொண்டது.

பேருந்தில் இருந்த பயணிகளை நடத்துநரும், ஓட்டுநரும் பத்திரமாக கீழே இறக்கி விட்டு பேருந்து சிக்கிக்கொண்ட தகவலை மாநகரப் போக்குவரத்து அலுவலகத்திற்கும், காவல்துறைக்கும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து ஊழியர்களும், காவல்துறையினரும் நீண்ட நேரம் போராடி பேருந்தை ரெக்கவர் வாகனம் மூலம் இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Video Top Stories