Viral Video: சென்னையில் போலீசை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்; லத்தி இருந்தும் ஓட்டம் பிடித்த காவலர்

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர் காவலர் ஒருவரை தாக்கி ஓடவிடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

சென்னை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் அண்மை காலமாக கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், காட்டுப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை, அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் ஓட ஓட துரத்தும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

மேலும் அந்த இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி காவலரை தாக்க முயற்சிப்பதும், தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த காவலர் அவர்களிடம் இருந்து ஓட்டம் பிடிக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

Related Video