தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற அகந்தையில் திமுக செயல்படுகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடல் வழக்கத்திற்கு மாறாக அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share this Video

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒரு ஏழைக் குழந்தையின் உயிர் அவ்வளவு மலிவானதா? இறந்த சிசுவின் உடலை அட்டைப்பெட்டியில் அடைத்து தரும் அவலம். நம்மை யார் கேள்வி கேட்பார்கள் என்ற அகந்தையுடன் திமுக ஆட்சி அதிகாரம் செய்கிறது. இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு அருகதையற்றவர்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Video