Watch : சென்னை-எத்தியோப்பியா இடையே நேரடி விமான சேவை - முதல் விமானத்திற்கு "வாட்டா் சலியூட்"!!

சென்னை-எத்தியோப்பியா இடையே நேரடி விமான போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கியது. எத்தியோப்பியாவிலிருந்து இன்று காலை சென்னை வந்த முதல் விமானத்திற்கு "வாட்டா் சலியூட்"கொடுத்து சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

First Published Jul 3, 2022, 4:04 PM IST | Last Updated Jul 3, 2022, 4:04 PM IST

எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம், இதுவரை எத்தியோயா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபா நகரிலிருந்து, இந்தியாவிற்கு டில்லி, மும்பை மற்றும் பெங்களூருவுக்கு ஏற்கெனவே எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமானங்களை இயக்கி வருகின்றன.

இப்போது முதல்முறையாக சென்னைக்கு இயக்க தொடங்கியுள்ளது. அதன்படி எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் முதல் விமானம், எத்தியோப்பியாவின் தலைநகா் அடிஸ் அபாபாவிலிருந்து புறப்பட்டு இன்று காலை 8.30 மணிக்கு சேவை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்து சோ்ந்தது.சென்னை விமானநிலையத்தில் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும்,2 தீயணைப்பு வண்டிகள் நின்று தண்ணீரை பீச்சியடித்து,"வாட்டா் சலியூட்" வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதோடு அதில் வந்த பயணிகளுக்கு,சென்னை சா்வதேச விமானநிலைய வருகை பகுதியில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விமானம் வாரத்தில் திங்கள்,புதன்,வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்கு புறப்படும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

Video Top Stories