ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் கவசம் இன்றி காட்சி அளிக்கும் ஆதிபுரீஸ்வரரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்

சென்னையில் நாக கவசம்  இன்றி இருக்கும் ஆதிபுரீஸ்வரரை முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபட்டார்.

Share this Video

வடசென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆதிபுரீஸ்வரர் ஆண்டிற்கு ஒருமுறை கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று தன் மீது சாத்தப்பட்டு இருக்கும் கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புனுகு சாம்பிராணி, தைலாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இதைக் காண சுற்றுவட்டார பகுதியில் மட்டுமல்லாது வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிவது வழக்கம். இந்நிலையில் கவசமின்றி காட்சியளிக்கும் ஆதி புரீஸ்வரரை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவியான துர்கா ஸ்டாலினும் வடிவுடையம்மன் கோவிலுக்கு திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசுடன் வருகை தந்து கவசம் இன்றி இருந்த ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்து சென்றார்.

Related Video