கைக்குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த இளம் பெண்ணை ஆக்ரோசமாக துரத்திய பசு; வீடியோ வெளியாகி பரபரப்பு

ஆவடிஅருகே  வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கும் பொழுது சாலையில் சுற்றி திரியும் பசுமாடு முட்டி துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Oct 27, 2023, 2:33 PM IST | Last Updated Oct 27, 2023, 2:33 PM IST

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் சோறஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளபூந்தமல்லி பாம்ஸ்குடியிருப்பு பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த நிலையில் சோறாஞ்சேரி கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை பராமரிக்காமல் தெருக்களில் விடுவதால் அருகில் இருக்கக்கூடிய பூந்தமல்லி ஃபான்ஸ் குடியிருப்பு பகுதியில் நுழைந்த பசுமாடு ஒன்று அந்தப் பகுதியில் கைக்குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை முட்டி துரத்தியது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட பெண்மணி கைக்குழந்தையுடன் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் புகுந்தார். இந்த சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மனிதர்களை முட்டுவதும், விரட்டுவதும் வழக்கமாகிவிட்டதாகவும், இந்த மாடுகளை பிடிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதேபோல் சோறாஞ்சேரி கிராமத்தில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து கோசலைக்கு அனுப்பி வைக்குமாறு பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தும் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

Video Top Stories