500 மூட்டையுடன் வந்த கண்டெய்னர் லாரி; மடக்கி பிடித்த பறக்கும் படை - கலக்கத்தில் பாஜக

சென்னை வில்லிவாக்கம் அருகே கண்டெய்னர் லாரியில் சுமார் 500 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, தொப்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

First Published Mar 25, 2024, 1:48 PM IST | Last Updated Mar 25, 2024, 1:48 PM IST

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சூடு பிடித்துள்ள நிலையில், அதிகாரிகள் வாகன தணிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சென்னை அடுத்த வில்லிவாக்கம் பகுதியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஹரியானா மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில், அந்த லாரியில் சுமார் 500 மூட்டைகளில் பாஜகவின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, தொப்பிகள் இருந்தன. அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories