அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்; ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்களால் மக்கள் அச்சம்

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஆவேசமாக மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்களால் பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

First Published Sep 8, 2023, 8:48 PM IST | Last Updated Sep 8, 2023, 8:48 PM IST

வடசென்னை திருவொற்றியூர் இரயில்வே நிலையத்தில் இன்று மாலை மாணவர்கள் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து ஒருவருக்கொருவரை ஓடஓட தாக்கி கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தாக்கிக்கொண்ட மாணவர்கள் புதுக்கல்லூரி மற்றும் தியாகராயா கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொருக்குப்பேட்டை இரயில்வே காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

Video Top Stories