IAS அதிகாரியின் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அழகிரியின் பேரன்; வீடியோ வைரல்
சென்னையில் காரில் முந்தி செல்வது தொடர்பாக ஏற்பட்ட மோதல் குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியின் குடும்பத்தினர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளரான ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் குடும்பத்தினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரன், பேத்தி உள்ளிட்டோர் காரில் பயணம் செய்துள்ளனர். அவர்களுக்கு அருகில் மற்றொரு காரில் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளரான ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் மற்றும் அவரது மனைவி பயணித்துள்ளனர்.
இரு கார்களும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் இரு தரப்பிலும் பெயர் குறிப்பிடாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது. இந்நிலையில் கே.எஸ்.அழகிரியின் பேரன், ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.