போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இருவர் இடையே ஏற்பட்ட மோதலால் இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jul 19, 2024, 7:19 PM IST | Last Updated Jul 19, 2024, 7:19 PM IST

சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழக்கம் போல் இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது பகல் 1.15 மணியளவில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் வழக்கறிஞர்கள் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், வழக்கறிஞர்கள் குழுக்களாக பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டனர். நாற்காலிகள், கற்களைக் கொண்டு வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டதால் நீதிமன்ற வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

மோதல் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். மோதல் காரணமாக 5 வழக்கறிஞர்கள் காயமடைந்து ராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories