நல்ல அதிகாரிகளின் செயல்பாட்டால் வெள்ளத்தில் இருந்து சென்னை மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் - தினகரன் புகழாரம்

நல்ல அதிகாரிகளின் திறமையான செயல்பாட்டால் கடும் வெள்ளத்தில் இருந்து சென்னை மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Share this Video

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாமல் திமுக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் புயல், வெள்ளத்தில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார்களோ என்ற அச்சம் எனக்கு எழுந்தது.

ஆனால், நல்ல அதிகாரிகளின் திறமைான செயல்பாட்டால் கடும் வெள்ளத்தில் இருந்து சென்னை மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திமுக அரசாங்கம் தாமதிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தேவையான உதவிகளை செய்து சென்னை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வழிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Video