Asianet News TamilAsianet News Tamil

எல்லாத்துக்கும் அரசாங்கத்த குறை சொல்லக் கூடாது; வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவ மன்சூர் அலிகான் கோரிக்கை

சென்னை அரும்பாக்கம் பகுதியில் தற்போது வரை தண்ணீர் வடியாத காரணத்தால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு நடிகர் மன்சூர் அலிகான் அழைப்பு விடுத்துள்ளார்.

First Published Dec 8, 2023, 6:06 PM IST | Last Updated Dec 8, 2023, 6:06 PM IST

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மீண்டுள்ள நிலையில் தற்போதும் சில பகுதிகள் நீரில் தத்தளித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை அரும்பாக்கம் பகுதியில் தனது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டுள்ள கார் பாதி மூழ்கிய நிலையில் அதில் ஏறிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அருகில்  தான் கூவம் ஆறு ஓடுகிறது. அணை நிரம்பும் தருவாயில் தண்ணீர் திறக்கும் பொழுதெல்லாம் இங்கு இப்படி தான் தண்ணீர் வரும். எதற்கெடுத்தாலும் அரசை குறைகூற முடியாது. அணையின் பாதுகாப்பு கருதி தான் அரசு தண்ணீரை திறந்து விடுகிறது. இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதி மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Video Top Stories