வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி... பார்க்கிங் ஏரியாவாக மாறிய பாலம் - படையெடுத்து நிற்கும் கார்கள்

வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக மாறியதால் அதிலிருந்து கார்களை பாதுகாத்துக்கொள்ள அங்குள்ள பாலத்தில் மக்கள் வரிசையாக பார்க்கிங் செய்துள்ளனர்.

First Published Dec 4, 2023, 12:06 PM IST | Last Updated Dec 4, 2023, 12:09 PM IST

சென்னையை மிக்ஜாம் புயல் பதம் பார்த்து வருகிறது. சென்னையில் பெருமழை பெய்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் வேளச்சேரியும் ஒன்றும். அங்கு தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக திரும்பிய பக்கமெல்லாம் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வேளச்சேரியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கி தங்களது கார்கள் சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மக்கள் வரிசையாக தங்களது கார்களை பார்க்கிங் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Video Top Stories