Asianet News TamilAsianet News Tamil

வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனை கைது செய்தது காஞ்சிபுரம் காவல்துறை

காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

First Published Sep 19, 2023, 11:45 AM IST | Last Updated Sep 19, 2023, 11:47 AM IST

யூடியூபர்  டிடிஎஃப் வாசன் கோவையில் இருந்து தனது நண்பர்களோடு மகாராஷ்டிராவிற்கு பைக் ரைட் புறப்பட்டுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே தனது இருசக்கர வாகனத்தை வீலிங் செய்த போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, டிடிஎஃப் வாசன் மீது  5 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர். 
 

Video Top Stories